சாதிக்கப்போகும் இஸ்ரோ.. லடாக்கில் களமிறங்கிய அனலாக் திட்ட கலன்.. உற்றுநோக்கும் உலக நாடுகள்.. மாஸ்
ஜம்மு காஷ்மீர்: இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ககன்யான். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக லடாக்கில் அனலாக் திட்ட கலனை இஸ்ரோ களமிறக்கி ஆய்வை தொடங்கி உள்ளது. இதனால் உலக நாடுகளின் பார்வை இஸ்ரோவை நோக்கி திரும்பி உள்ளது.
விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது நம் நாட்டின் இஸ்ரோ. சமீபத்தில் சந்திரயான் - 3திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் களமிறக்கி சாதனை படைத்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளே தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள அஞ்சும் நிலையில் சந்திரயான் -3 திட்டத்தின் ரோவர் நிலவின் தென்துருவத்தில் விரிவான ஆய்வை மேற்கொண்டு அசத்தியது.

இதன் அடுத்தக்கட்டமாக இஸ்ரோ கையில் எடுத்து இருக்கும் திட்டம் தான் ககன்யான். இந்த திட்டத்தின் மூலம் 2025ம் ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இஸ்ரோ அறிவித்தது.
தற்போது இந்த திட்டம் தள்ளிப்போய் உள்ளது. அதாவது ககன்யான் திட்டம் மூலம் வீரர்கள் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் நம்நாட்டில் இருந்து வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெளிவுப்படுத்தி உள்ளது. இதற்கான பயிற்சிகளை 6 வீரர்கள் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளனர். இதில் 3 வீரர்கள் இந்த ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்கள் விண்வெளியில் 400 கிமீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் இருந்து ஆய்வு செய்வார்கள். அதன்பிறகு மீண்டும் அவர்கள் பூமிக்கு திரும்பி வருவார்கள். இது தான் ககன்யான் திட்டமாகும்.
மேலும் ககன்யான் திட்டத்துக்காக இஸ்ரோ பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரோ சார்பில் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக லடாக் யூனியன் பிரதேசத்தில் ‛அனலாக்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. லடாக்கின் லே பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது பூமிக்கு மேலே விண்வெளி வீரர்கள் செல்லும்போது பல்வேறு சவால்களை சந்திப்பார்கள். இந்த சவால்களை விண்வெளி வீரர்கள் சமாளிக்கும் வகையில் ‛அனலாக்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளி வீரர்கள் பயணிக்கும் பயண கலனை போல் லே பகுதியில் இஸ்ரோ அமைத்துள்ளது. இந்த லே பகுதி என்பது செவ்வாய் மற்றும் நிலவின் நிலப்பரப்பின் தன்மையை ஒத்துள்ளது. இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து அமைந்து இருக்கும் உயரம், இங்கு நிலவும் கடும் குளிர் மற்றும் கடும் வெப்பம் உள்ளிட்டவை விண்வெளி செல்லும் வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். இதனால் இந்த பகுதியில் ‛அனலாக' திட்டத்தின் கீழ் ககன்யான் விண்வெளி கலனை போல் அமைப்பு வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இஸ்ரோவின் மனித விண்வெளி திட்ட மையம், ஆஹா (AAKA) ஸ்பேஸ் ஸ்டுடியோ, லடாக் பல்கலைக்கழகம், ஐஐடி பாம்பே மற்றும் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆஹா ஸ்பேஸ் ஸ்டுடியோ என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயண கலனை உரிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
லடாக்கில் அனலாக் திட்டத்தின் மூலம் விண்வெளி கலன் நிறுத்தப்பட்டு இருப்பதன் மூலம் விண்வெளியில் நிலவும் காலநிலைகளை பொறுத்து வீரர்களின் பயன கலனில் தொழில்நுட்ப ரீதியாகவும் மாற்றம் கொண்டு வருவது தான் நோக்கமாகும். அதேபோல் விண்வெளி வீரர்களின் உளவியல் மதிப்புகளை ஆராயவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தான் இஸ்ரோ சார்பில் லடாக்கின் லே பகுதியில் அனலாக் திட்ட ஆய்வு தொடங்கி உள்ளதோடு உலக நாடுகளின் பார்வை இஸ்ரோவின் பக்கம் திரும்பி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications