For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது நல்ல பயணம் பாஸ்.. இஸ்ரோ செய்த உருக்கமான டிவிட்.. சந்திரயான் 2ல் இப்படி ஒரு சென்டிமென்டா!

சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டார் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டும் பேசிக்கொள்வது போல இஸ்ரோ உருக்கமான டிவிட் ஒன்று செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Last 15 minutes are the most crucial time for Chandrayaan-2

    டெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டார் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டும் பேசிக்கொள்வது போல இஸ்ரோ உருக்கமான டிவிட் ஒன்று செய்துள்ளது.

    சந்திரயான் 2 மிகப்பெரிய சாதனைக்கு தயார் ஆகிவிட்டது. உலகில் உள்ள எல்லா விஞ்ஞானிகளின் பார்வையும் தற்போது சந்திரயான் 2ன் மீதுதான் இருக்கிறது.

    நாளை அதிகாலை 1.30 மணிக்கு சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும். அதே போல் சந்திரயான் 2ல் இருக்கும் பிரக்யான் ரோவர் காலை 5.30 மணிக்கு நிலவில் தரையிறங்கும்.

     சிட்டி 3.0 ரீ லோடட்.. ரோபோவின் சொல்படி பறக்க போகும் சந்திரயான் 2.. வியப்பூட்டும் விஷயம்! சிட்டி 3.0 ரீ லோடட்.. ரோபோவின் சொல்படி பறக்க போகும் சந்திரயான் 2.. வியப்பூட்டும் விஷயம்!

    சந்திரயான் 2 எப்படி

    சந்திரயான் 2 எப்படி

    சந்திரயான் 2ல் இருந்து ஆர்பிட்டார் எனப்படும் சாட்டிலைட் ஏற்கனவே கழற்றி விடப்பட்டுவிட்டது. இதற்கு பூமியில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டு, கழற்றிவிடப்பட்டது. இது தற்போது நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டார் நிலவை அடுத்த ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் போல சுற்றி வந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

    ஆர்பிட்டர் நிலவு

    ஆர்பிட்டர் நிலவு

    இந்த ஆர்பிட்டார் நிலவில் இறங்காது. இதில் இருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும்தான் நிலவில் இறங்கும். இந்த ஆர்பிட்டார்தான் விக்ரம் மற்றும் பிரக்யான் இரண்டையும் நிலவிற்கு கொண்டு சென்றது. ஆர்பிட்டார் உதவியுடன்தான் இது நிலவு வரை சென்றது. இந்த மூன்றும் தற்போது தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

    விக்ரம் பிரக்யான்

    விக்ரம் பிரக்யான்

    இந்த நிலையில் ஆர்பிட்டாரில் இருந்து விக்ரம் மற்றும் பிரக்யான் பிரிக்கப்பட்டது குறித்து இஸ்ரோ அழகான உருக்கமான டிவிட் ஒன்றை செய்துள்ளது. அதில், ஆர்பிட்டார் விக்ரமை பார்த்து ''உன்னுடன் இத்தனை நாட்கள் பயணித்தது மிகவும் சிறப்பாக இருந்தது'' என்று கூறுகிறது.

    பயணம்

    பயணம்

    இதற்கு விக்ரம், ''ஆம் அது நல்ல பயணம், நான் நீ நிலவை சுற்றி வருவதை கண்டிப்பாக பார்ப்பேன்'' என்று ஆர்பிட்டாரை பார்த்து சொல்கிறது. அதற்கு ஆர்பிட்டார், ''பெஸ்ட் ஆப் லக் விக்ரம், நீ சீக்கிரம் நிலவின் தென் துருவத்தை அடைவாய் என்று நம்புகிறேன்'', என்று கூறியுள்ளது. இஸ்ரோவின் இந்த அழகான டிவிட் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    ISRO tweets about Chandrayaan 2's Orbiter and Lander Vikram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X