Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரித்திர சாதனை படைக்கும் இஸ்ரோ.. வெறும் 15 மீ தொலைவில் ஸ்பேடெக்ஸ் சாட்டிலைட்கள்! எப்போது முடியும்?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: நமது விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்வெளியில் தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இதற்கிடையே ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் விண்வெளியில் இரண்டு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.. இப்போது இரு விண்கலன்களுக்கு இடையேயான தூரம் வெறும் 15 மீட்டராக குறைந்துள்ளது. மிகச் சீக்கிரமே இந்த பணிகள் முடியும் என்று தெரிகிறது.

இந்த 21ம் நூற்றாண்டில் விண்வெளி துறையில் ஆய்வுகள் வேகமெடுத்துள்ளன. அதில் நமது இஸ்ரோ தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

isro space science


வல்லரசு நாடுகள் கூட திணறும் பல ஆய்வுகளை, மிகக் குறைந்த செலவில் இஸ்ரோ பக்காவாக திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்து வருகிறது. மேலும், ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் சாட்டிலைட்களையும் வெற்றிகரமாக ஏவி வருகிறது.

ஆய்வு நிலையம்:

விண்வெளி ஆய்வில் அடுத்தகட்டமாக விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு இணையாக இந்த பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் ஆய்வு மையத்தை இஸ்ரோ அமைக்கவுள்ளது. 2035க்குள் இதை நிறுவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக சோதனை முயற்சியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) திட்டத்தை இஸ்ரோ இப்போது கையில் எடுத்துள்ளது.

விண்வெளியில் வைத்து இரு சாட்டிலைகளை ஒருங்​கிணைக்​கும் பரிசோதனை முயற்சியே இந்த ஸ்பேடெக்ஸ் திட்டமாகும். இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரண்டு சாட்டிலைட்கள் கடந்த டிசம்பரில் பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டன. முதலில் அந்த இரு சாட்டிலைட்களும் ஒரே சுற்றுவட்டபாதையில் ஒன்றன்பின் ஒன்றாக இஸ்ரோ சுற்றி வரச் செய்தது.

நடு ஊரில் விழுந்த மர்ம பொருள்.. வானில் இருந்து வந்த 500 கிலோ "ரிங்.." கலர் வேற மாறுதாம்! திக்திக்


இஸ்ரோ:

அடுத்த கட்டமாக இரு சாட்டிலைட்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்காக இரு சாட்டிலைட்களுக்கு இடையேயான தூரத்தை இஸ்ரோ மெல்லக் குறைத்து வருகிறது. கடந்த 8ம் தேதி இரு சாட்டிலைட்களுக்கு இடையேயான தூரம் 500 மீட்டராக இருந்தது. அது படிப்படியாகக் குறைக்கப்பட்ட சூழலில், இப்போது இரு சாட்டிலைட்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைந்துள்ளது.

இதை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இரு சாட்டிலைட்களும் இணைய இன்னும் வெறும் 50 மீட்டர் மட்டுமே இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான சில அற்புதமான போட்டோக்களையும் இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

என்ன நடந்தது:

இது தொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "ஸ்பேடெக்ஸ் அப்டேட்.. இரு விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் இடையேயான தூரத்தை 3 மீட்டராக குறைக்கும் சோதனை முயற்சியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்போது இரண்டும் மீண்டும் பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டுவிட்டது. டேட்டாக்களை ஆய்வு செய்த பிறகு இரு சாட்டிலைட்களையும் ஒருங்கிணைக்கும் பணி நடக்கும்" என்று தெரிவித்துள்ளது.

எப்போது முடியும்:

அதாவது இப்போது சோதனை முயற்சியாக இரு விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டு, இப்போது மீண்டும் அது 15 மீட்டர் தொலைவில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. டேட்டாவை ஆய்வு செய்த பிறகு இன்னும் சில மணி நேரத்தில் இந்த ஒருங்கிணைப்பு பணிகள் முழுமையாக முடியும் எனத் தெரிகிறது. இந்த பணிகள் வெற்றிகரமாக முடிந்தால் அது இஸ்ரோவின் முக்கிய சாதனையாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+