முதல்கட்டமாக 27ம் தேதி ஸ்ரீநகரில் இருந்து சவுதி கிளம்பும் 275 ஹஜ் யாத்ரிகர்கள்
ஸ்ரீநகர்: முதல்கட்டமாக ஜம்மு காஷ்மீரில் இருந்து 275 ஹஜ் பயணிகள் வரும் 27ம் தேதி சவுதி அரேபியாவுக்கு கிளம்புகிறார்கள்.
முஸ்லீம்கள் புனித ஹஜ் பயணம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் முதல்கட்டமாக ஜம்மு காஷ்மீரில் இருந்து 275 பேர் வரும் 27ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கிளம்புகிறார்கள்.
இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது,
முதல்கட்டமாக 275 பேர் ஸ்ரீநகரில் இருந்து சவுதியில் உள்ள மதினாவுக்கு செல்கிறார்கள். அதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி வரை சவுதிக்கு விமானங்கள் ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்லும். ஹஜ் யாத்ரிகர்களுக்கு கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பயிற்சி அளிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் நடத்தப்பட்டது. ஹஜ் பயணிகளுக்கு சிறந்த வசதிகள் செய்து கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் மக்களின் கட்டாய கடமைகளில் ஒன்று ஹஜ். புனித ஹஜ் பயணம் செய்ய வேண்டும், அந்த பயணத்தின்போது மக்காவில் உயிர் போக வேண்டும் என்று பல முஸ்லீம்கள் விரும்புவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications