நாடு முழுவதும் நடந்த சோதனையில் ரூ.86 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.428 கோடி பறிமுதல் !
நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.86 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.428 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவுக்கு பின்னர் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்றி வந்தனர்.

இதனிடையே புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. கருப்பு பணம் பதுக்கியவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அதன்படி நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு நடந்த சோதனையில் ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 677 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் 19 வரையில் தாமாக முன்வந்து ரூ.3,185 கோடி பணத்திற்கு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.428 கோடி பணத்தில் 86 கோடி ரூபாய் புதிய நோட்டுகளாகும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications