கர்நாடக பந்த்.. தமிழ் டிவி சேனல்கள் முடக்கம்.. ஐடி நிறுவனங்களுக்கு லீவு #TNNeedsKaveri
பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 6 மணிவரை தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ் டிவி சேனல்கள் முடக்கப்பட்டன. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நகரங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பல்வேறு கன்னட அமைப்புக் கர்நாடக பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆளும் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று காலை பந்த் தொடங்கியது.

நேற்றிரவு முதலே பெங்களூரு நகரம் வெறிசோடியது. கேஆர். மார்க்கெட், யஷ்வந்த்பூர் மார்க்கெட், கலாசிபாளையம் ஆகிய பகுதிகள் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை முடங்கின. 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு, பேருந்துகள் இயங்கின. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அவை மூடப்பட்டன. பல நிறுவனங்களில் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ஒரு நிறுவனமும் இன்று திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதேசமயம், செப்டம்பர் 10ம் தேதி அதாவது நாளைக்கு நிறுவனம் செயல்படும் என்றும் விப்ரோ அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட உள்ளூர் விடுமுறை போல பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்போசிஸ் நிறுவனம் இன்று செயல்படாது என்றும் அதற்குப் பதில் செப்டம்பர் 18ம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தியேட்டர்கள் இயங்கவில்லை. தமிழ்ப் படங்களை திரையிடுவதை ஏற்கனவே நிறுத்தி வைத்து விட்டனர். இன்று ஒரு தியேட்டரும் திறக்கப்படவில்லை. 6 மணிக்கு மேல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

தமிழ் டிவி சேனல்களையும் கன்னட அமைப்பினரின் மிரட்டல் காரணமாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முடக்கினர். இதனால் டாடா ஸ்கை போன்ற டிஷ் ஆன்டனா சர்வீஸை வைத்திருப்பவர்கள் மட்டுமே தமிழ் சானல்களைப் பார்க்க முடிந்தது. கேபிள் டிவி மூலம் பார்ப்போருக்கு தமிழ் டிவி சானல்கள் கிடைக்கவில்லை. 6 மணிக்கு மேல் பந்த் முடிந்த பின்னர் மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications