நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.. ஆழ சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. தமிழிசை
டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு குழுவினரக்கு பாராட்டு தெரிவித்ததோடு, நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.... ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.. என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனடியாக மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி முதலில் அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
உத்தரகாண்ட் மாநிலம்,உத்திரகாசி சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 28, 2023
நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்....
ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்.....… pic.twitter.com/xNvU0aNPoe
மகிழ்ச்சி அடைந்தேன்: அதில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மீட்பு பணிகள் நடந்தது. அடுத்ததாக பிளான் பி படி மீட்பு பணிகள் தொடர்ந்தது. இப்பாடியாக மீட்பு குழுவினர் 17- வது நாளாக போராடி தற்போது இன்று இரவு 8 .30 மணியளவில் அனைத்து அதாவது 41 தொழிலாலர்களையும் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு கூடியிருந்த பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- உத்தரகாண்ட் மாநிலம், உத்திரகாசி சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆழச்சுரங்கத்தில் சிக்கியவர்களை: நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.... ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்..... என்று நிரூபித்த இந்திய தொழில்நுட்பத்திற்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகள், மத்திய, மாநில அரசுகள், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்துள்ள மத்திய,மாநில அரசுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.... தொழிலாளர்கள் அனைவரும் முழு உடல் நல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் பதிவிட்டுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications