'பாகுபலி' பட தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு !
பாகுபலி திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஹைதராபாத்: பாகுபலி பட தயாரிப்பாளர்கள் பிரசாத் தேவி நேனி, ஷோபு யார்ல கட்டா ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நகரங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை, சண்டீகர் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு சோதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள், ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

அதேநேரம் ஹைதராபாத்தில் உள்ள பாகுபலி பட தயாரிப்பாளர்கள் பிரசாத் தேவி நேனி, ஷோபு யார்ல கட்டா ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. சோதனையைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் மற்ற தயாரிப்பாளர்களும் பீதியில் உள்ளனர்.
பாகுபலி முதல் பாகம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications