அதிரடி பேட்டி புகழ் புகழேந்தியின் பெங்களூர் வீட்டிலும் ஐடி ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள், புகழேந்தி வீட்டிலும் சோதனை- வீடியோ

  பெங்களூர்: சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலரது வீடுகளில் தமிழகத்தில் ஐடி ரெய்டு காலை முதல் நடைபெறுகிறது. அதேபோல பெங்களூரிலுள்ள அதிமுக கட்சி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி வீட்டிலும் ஐடி ரெய்டுகள் நடக்கின்றன.

  கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருப்பவர் புகழேந்தி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றபோது, அவருக்காக தனது சொத்துக்களை பிணையமாக வைத்தவர் இவர்.

  IT raids take place at AIADMK Karnataka state secretary Pugazhendi house

  ஆனால் இப்போது தீவிரமான தினகரன் ஆதரவாளராக இருந்து வருகிறார். சிறையில் சசிகலாவுக்கு தேவைப்படும் அவசர உதவிகளுக்கு இவரையே நம்பியுள்ளனர்.

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக கடுமையாக பேட்டிகள் அளிப்பவர். இவரது வீடு பெங்களூர் எச்.ஏ.எல் அருகேயுள்ள, முருகேஷ்பாளையா பகுதியில் உள்ளது.

  இன்று காலை முதல் புகழேந்தி வீட்டில் ஐடி அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்திவருகிறார்கள்.ஒரு பெண் அதிகாரி உட்பட 11 அதிகாரிகள் அங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  IT raids take place at AIADMK Karnataka state secretary Pugazhendi house which is located at Bengaluru.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற