இவான்கா, ஆலோசகர் ஜாரேட் குஷ்னர் ... குடும்பத்தோடு இந்தியா வருகை தரும் டிரம்ப்- மெலானி தம்பதி!
Recommended Video
டெல்லி: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியுடன் மகள் இவான்கா, ஆலோசகர் ஜாரேட் குஷ்னர் ஆகியோரும் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.
அமெரிக்கா அதிபர் டிரம்ம்ப் வரும் 24,25 ஆகிய நாட்களில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குஜராத்தின் அகமதாபாத்துக்கு டிரம்ப் வருகை தருவதையொட்டி அங்கு குடிசை பகுதிகளை மறைத்து கட்டப்பட்ட சுவர் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் டிரம்ப்புடன் அவரது மகளும் ஆலோசகருமான இவான்கா, மற்றொரு ஆலோசகர் ஜாரேட் குஷ்னர் ஆகியோரும் இந்தியா வருகை தருகின்றனர்.
முதலில் அகமதாபாத் பயணம் மேற்கொள்ளும் இவர்கள் பின்னர் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். இதனையடுத்து அனைவரும் டெல்லி நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவான்கா, ஹைதராபாத் வருகை தந்திருந்தார். மேலும் டிரம்ப்புடன் வர்த்தகத் துறை செயலாளர் வில்பர் ரோஸ், எரிசக்தி துறை செயலாளர் டான் பிரவுல்லைட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி பிரைன், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மைக் முல்வானே ஆகியோர் அடங்கிய குழுவும் இந்தியா வருகை தருகிறது.
மனைவி மெலானி, மகள் இவான்கா என குடும்பத்திடன் டிரம்ப் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது. ஆகையால் இந்திய பயணத்தை டிரம்ப் முக்கியமானதாக கருதுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் பொருட்கள் மீது இந்தியா அதிக அளவில் வரி விதித்திருப்பதாக டிரம்ப் அதிருப்தியை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்தான் தம்முடன் வர்த்தக குழு ஒன்றையும் டிரம்ப் இந்தியாவுக்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications