காஷ்மீரில் கூட்டணி ஆட்சி: மோடியுடன் பி.டி.பி. தலைவர் முப்தி முகமது சயீத் சந்திப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.)யின் மூத்த தலைவரும் முதல்வராக பதவியேற்க இருப்பவருமான முப்தி முகமது சயீத் இன்று சந்தித்து பேசினார்.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) 28, பாரதிய ஜனதா கட்சி 25, தேசிய மாநாட்டு கட்சி(என்.சி) 15, காங்கிரஸ் 12 தொகுதிகளில் வென்றிருந்தன. இங்கு ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. எந்த ஒரு கட்சிக்கும் 44 எம்.எல்.ஏக்கள் இல்லாததால் கூட்டணி அரசு அமைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பி.டி.பி., பாரதிய ஜனதா கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைப்பது குறித்து பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் இரு கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் புதிய ஆட்சியை அமைக்க முடிவு செய்தன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா முதல் முறையாக ஆட்சியில் பங்கேற்கிறது. அம்மாநிலத்தின் முதல்வராக பி.டி.பி.யின் மூத்த தலைவர் முப்தி முகமது சயீத் வரும் ஞாயிறன்று பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முப்தி முகமது சயீத் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது ஞாயிறன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவும் பிரதமர் மோடிக்கு முப்தி முகமது சயீத் அழைப்பு விடுத்தார்.
1989ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் முப்தி முகமது சயீத். காங்கிரஸ் ஆதரவுடன் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராகவும் அவர் பதவி வகித்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்க இருக்கிறார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications