Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி லட்டுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. அந்தர்பல்டி அடித்த ஜெகன்மோகன் ரெட்டி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: திருப்பதியில் லட்டு விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி உள்ள நிலையில், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானமே பொறுப்பு என்றும், அதற்கும் ஆந்திரப்பிரதேச அரசுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததே இல்லை என்று முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டு வைத்தார்.

tirupati laddu andhra pradesh jagan mohan reddy

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை தேவஸ்தானம் சார்பில் கோயிலில் தீட்டு கழிப்பதற்காக பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருமலையில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருப்பதி கோயிலுக்கு ஜெகன்மோகன் ரெட்டி செல்வதாக இருந்த நிலையில் ஏழுமலையான் மீது நம்பிக்கையுள்ளது என தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னரே ஜெகனை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் கோரிக்கை வலுத்ததால் ஜெகன்மோகனின் பயணம் ரத்து செய்யப்பட்டாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி கோயிலுக்கு நான் செல்லக் கூடாது என்பதற்காக ஆந்திர அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுகுறித்து எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோருக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ஜெகன்மோகன் திருப்பதிக்குச் செல்வது அனுமதி பெறாதது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸை போலீஸாரே வழங்கியுள்ளனர். திருப்பதிக்கு நான் பலமுறை சென்றிருக்கிறேன். பாத யாத்திரைக்கு முன்பும், பின்பும் திருமலைக்கு நடந்தே சென்றிருக்கிறேன். முதல்வராக இருந்தபோது தேவஸ்தானம் சார்பில் எனக்கு ஒவ்வொரு ஆண்டும் அழைப்பு விடுக்கப்படும். ஆண்டுதோறும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு வஸ்தரம் சாற்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால், தற்போது இந்த லட்டு பிரச்சனை திசை திருப்பப்பட்டுள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய தவறை செய்துவிட்டார். திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் நற்பெயரை, மதிப்பைக் குறைத்துவிட்டார். லட்டின் மீதான மரியாதை சந்திரபாபு நாயுடுவால் அழிக்கப்பட்டுவிட்டது. வேண்டும் என்றே சந்தேக விதையை விதைத்துள்ளார். திருப்பதி லட்டு சாப்பிடுவதற்கு ஏற்றது இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார். அவர் சொல்வது பொய் என்று அவருக்கே தெரியும்.

திருப்பதியில் லட்டு, பிரசாதத்துக்கு பொருள்கள் கொள்முதல் செய்வது புதிய விஷயமல்ல. பல ஆண்டுகாலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் மிகப்பெரிய நல்ல மதிப்புள்ள நிறுவனம். அந்த வாரியத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். தேவஸ்தான வாரியத்தில் உறுப்பினராவதற்கு மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்களின் பரிந்துரை கண்டிப்பாக வேண்டும். அதுபோன்றவர்களைக் கொண்ட சிறந்த அமைப்பு திருமலா திருப்பதி தேவஸ்தானம்.

இந்த உறுப்பினர்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பணி செய்யக்கூடியவர்கள். என்ன பணி செய்தாலும் அது கோயிலுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும். திருப்பதி பிரசாதம் தயாரிப்பதற்கான பொருட்களைக் கொள்முதல் செய்ய 6 மாதங்களுக்கு ஒரு முறை டெண்டர் விடப்படும். இந்த விஷயத்தில் அரசு தலையிடுவதில்லை.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் குறைந்த விலையை நிர்ணயிப்பவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுவது வழக்கம். அதுவும் ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் விடப்படுவதில்லை. என்ஏபிஎல் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தின் சான்றிதழுடன் மட்டுமே கோயிலுக்கு நெய் வழங்கப்படும். 3 சோதனைகளில் ஒரு சோதனையில் தோல்வி அடைந்தாலும் பொருள்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த சமயத்தில் 10க்கும் மேற்பட்ட முறை லாரிகள் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. நான் முதல்வராக இருந்த காலகட்டத்திலும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+