ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோகம்.. ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.. 30-இல் பதவியேற்பு
Recommended Video
அமராவதி: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் அமோகமாக வாக்குகளை பெற்று முன்னிலை வருவதால் அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர சட்டசபையானது 176 தொகுதிகளை கொண்டது. இங்கு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 103 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியோ 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அதில் ஒன்று ஆந்திரம்.

ஆட்சி
இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின்படி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கணிப்பு
எனவே முதல் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பால் தொண்டர்களும் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.

வெற்றி யாருக்கு
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அது போல் தெலுங்கு தேசம் கட்சிக்கு 29 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியை சந்தித்ததால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். இதையடுத்து வரும் 30-ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் ரோஜா?
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு சோதனைகளில் உருதுணையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் நகரி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமையவுள்ளதால் ரோஜாவுக்கு மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications