சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துள்ளார்... ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு!!
அமராவதி: சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துள்ளார் என்று ஆந்திராவின் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி கூறி இருக்கிறார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது. ஆந்திராவின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்களே கிடைத்துள்ளன.

இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தனது கட்சி எம்எல்ஏக்களுடனான கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். அப்போது," சந்திரபாபு நாடுயுடுவின் தவறுகளுக்கு கடவுள் தண்டனை கொடுத்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 23 எம்எல்ஏக்களை சந்திரபாபு நாயுடு விலை கொடுத்து வாங்கினார். ஆனால், தற்போது சந்திரபாபு நாயுடு கட்சிக்கு அதே 23 இடங்கள்தான் கிடைத்துள்ளன.
அதேபோன்று, கடந்த முறை நமது கட்சியின் மூன்று எம்பி.,க்களையும் குதிரை பேரம் நடத்தி நாயுடு விலைக்கு வாங்கினார். இந்த முறை அவரது கட்சிக்கு மொத்தம் மூன்று எம்பி.,க்களே கிடைத்துள்ளனர். இந்த அழகான திரைக்கதையை இறைவன்தான் எழுதியுள்ளான்.
இந்த தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது சாதாரணமான சாதனை அல்ல. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக புதிய உறுப்பினர்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி என்பது வரும் 5 ஆண்டுகளில் நாம் எவ்வாறு மக்கள் நலப்பணிகளை செய்கிறோம் என்பதை பொறுத்தே அமையும் என்பதை அனைவரும் மனதில் நிறுத்தி பணியாற்ற வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட தனது கட்சி எம்பிக்களிடம் தனியாக நடந்த கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி," ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதே முதல் நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பாடுபட வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications