"நமஸ்கார்.. ஏக் துஜே கேலியே.. ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்".. எரவாடா சிறையில் ஆர்.ஜே. ஆன சஞ்சய் தத்!!
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், அங்கு ஒலிபரப்பப்படும் ஆர்.ஜே.வாக பணிபுரிந்து வருகிறாராம்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் நடிகர் சஞ்சய் தத்.
தற்போது அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்கூட்டியே விடுதலை...
சிறையில் அவரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவரை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட இருக்கிறார். இம்மாதம் 25ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.ஜே...
இந்நிலையில், எரவாடா சிறைக்குள் ஒலிபரப்பப்படும் ரேடியோவில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, அதாவது ஆர்ஜேவாக பணி புரிந்து வருகிறாராம் சஞ்சய் தத். அவரது நிகழ்ச்சிக்குப் பெயர் ஆப் கி பர்மாஷ்.

ரசிகர்கள்...
சஞ்சய் தத்தின் குரலுக்கு சிறையில் உள்ள கைதிகள் ரசிகர்களாக ஆகி விட்டனராம். தங்களுக்குப் பிரியமான காட்சி, பாடல், வசனம் உள்ளிட்டவற்றை ஒலிபரப்பும்படி அவரிடம் அவர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.

நேயர் விருப்பம்...
இந்த நிகழ்ச்சி ஏறக்குறைய நேயர் விருப்பம் போன்றது தான். தாங்கள் விரும்பிக் கேட்கும் பாடல், காட்சி, வசனம் போன்றவற்றை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நேயர்கள் சமர்ப்பிக்கலாம்.

சஞ்சய்க்கே சமர்ப்பணம்...
விரைவில் சஞ்சய் தத் ரிலீசாக இருப்பதால், பெரும்பாலோர் தங்களது விருப்பப் பாடலை சஞ்சய் தத்துக்கே சமர்ப்பிப்பதாக சிறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கைதிகளுக்காக...
எரவாடா சிறையில் வெவ்வேறானா பிரிவுகளில் மொத்தம் 4133 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ரேடியோவானது சிறைக் கைதிகளுக்காக என கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications