Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்தா சாரே..பப்ளிக்ல இப்படி? ஃபுல் போதையில் கடையில் பாக்சிங்..மீண்டும் சர்ச்சையில் ஜெயிலர் விநாயகன்

Subscribe to Oneindia Tamil

பனாஜி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபல நடிகரான விநாயகன் கோவாவில் பிரியாணி கடை ஒன்றில் சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் கடையில் சண்டை போட்டதாக கூறப்படும் நிலையில், நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

மலையாளத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரை உலகிலும் பிரபல நடிகராக அறியப்பட்டவர் விநாயகன். தமிழில் சிலம்பாட்டம், மரியான் ,காளை, திமிரு உள்ளிட்ட படங்களை நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

vinayakan cinema jailer

குறிப்பாக திமிரு படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பெயர் சொல்ல வைக்கும் பல படங்களை அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக 2016ல் அவர் நடித்த கம்மாண்டி படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

கங்கா எனும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு கேரளா அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று தந்தது. அடிப்படையில் நடன கலைஞரான அவர் தீ நடனத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆடு, ஒருத்தி, ஆடு 2, காசர்கோல்டு, தொட்டப்பன், டிரான்ஸ், ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் பிரபல நடிகர் அரியப்பட்டார்.

சிறிது காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் ஜெய்லர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சிலை கடத்தலில் ஈடுபட்டு இருக்கும் டான் கதாபாத்திரம் அவரை ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சென்றது. குறிப்பாக மலையாளம் கலந்த அவரது தமிழ் பேச்சு வர்மன் என்ற கேரக்டரை ரசிகர்களை மிரட்டியது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் நடிகர் விநாயகனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. கோவா சென்றிருந்த விநாயகன் பிரியாணி கடை ஒன்றில் மது போதையில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கேசுவல் உடையில் கைகளை பின்னே கட்டியவாறு கடைக்காரருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவருக்கு கடைக்காரரும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அளவுக்கு மீறிய மது போதையில் விநாயகன் இருந்திருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் போதைப் பொருட்களை விநாயகர் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் இது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

நடிகர் விநாயகன் சர்ச்சையில் சிக்குவதும், காவல்துறையால் கைது செய்யப்படுவதும் இது புதிதல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் தகராறு செய்ததாக அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2023 அக்டோபர் மாதம் குடும்ப தகராறு தொடர்பாக எர்ணாகுளம் காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல் நிலையத்தில் மது போதையில் புகை பிடித்ததோடு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீசார் ஜாமினில் வெளியே விட்டது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல் கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான உம்மன் சாண்டியைப் பற்றி முகநூல் நேரலையில் அவதூறாக பேசினதாக அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உம்மன் சாண்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விடுமுறை வழங்கியதால் கோபத்தில் அவர் பேசியதாகவும், அதனால் அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

மேலும் பெண் கவிஞர் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டதோடு, பல பெண்களுடன் தான் உடல் ரீதியான உறவில் இருந்தேன் என பேசி சர்ச்சையில் சிக்கியதும், கடந்த செப்டம்பர் மாதம் கோவா விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கியதாக கைதானதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+