For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட்: உதயமாகும் 12 புதிய மருத்துவக் கல்லூரிகள், 5 ஐஐஎம், 5 ஐஐடி நிறுவனங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கூடுதலாக கூடுதலாக 5 ஐஐஎம் மற்றும் 5 ஐஐடி.,கல்வி நிறுவனங்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

2014-15ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை லோக்சபாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், நாடு முழுவதும் 12 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஹரியானா, தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் துவக்கப்படும்.

நாட்டில் கூடுதலாக 5 ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட்), 5 ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதற்காக முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

English summary
Finance MinisterArun Jaitley allocated Rs 500 crore (Rs 5 billion) to set up up five new IIMs (Indian Institute of Management Studies) and five new IITs (Indian Institute of Technology) in the Union Budget 2014-15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X