பட்ஜெட் 2018: 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன- ஜேட்லி
இந்த ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிப்பு - வீடியோ
டெல்லி: இந்த ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.

அப்போது அவர் கூறுகையில் , இந்த ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முத்ரா யோஜனா கீழ் ரூ3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
ஜவுளி துறைக்கு ரூ7,148 கோடி ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், கிராமபுற சுகாதாரத்துக்கு ரூ16,713 கோடி வழங்கப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications