100க்கும் மேற்பட்ட காளைகளுடன் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!
தடையை மீறி ஆந்திர மாநிலத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் விரட்டப்பட்டன.
செகந்திராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் விரட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதுதொடர்பான போராட்டமும் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

தமிழ் நாட்டில் பரபரப்பாக இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு ஆந்திர மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் தடையை மீறி மாட்டுப் பொங்கலான இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதுவும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான நாராவாரிபள்ளியில் அவரது வீட்டிற்கு அருகில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதில் நூற்றுகணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனர். மேலும், இதனைக் காண நூற்றுக் கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் ஆந்திராவிலும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications