தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்? மத்திய அரசு பரிசீலனை
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு 2014 ஆம் ஆண்டு முதல் உச்சநீதி மன்றம் தடை விதித்தது. தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தமிழ் மக்களும் தொடர்ந்து சட்டரீதியாகவும், களத்திலும் போராடி வருகிறார்கள். மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை ஜல்லிக்கட்டு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் இந்த வருடமும் தமது பாரம்பரிய பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாமல் போகுமே என்ற அச்சத்திலும், கவலையிலும் தமிழக மக்கள் மூழ்கி உள்ளனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய சட்ட அமைச்சகத்திடம் அவசர வட்ட வரைவை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications