மேற்கு வங்கத்தில் "செட்டிலாகி" இந்தியாவில் தாக்குதல் நடத்த வங்கதேச தீவிரவாதிகள் சதி!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ஹைதராபாத்தை தலைமையிடமாக அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி வரும் நிலையில் இந்தியர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி தாக்குதல் நடத்த வங்கதேச தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத்தை தலைமையகமாக்க உள்ளூர் தீவிரவாத இயக்கங்கள் உதவியுடன் அல்கொய்தா இயக்கம் முயற்சித்து வருகிறது. ஹைதராபாத்தை இந்தியாவிடம் இருந்து விடுவித்து மீண்டும் நிஜாம்கள் ஆட்சியை கொண்டுவருவோம் என்ற பிரசாரத்தின் மூலமாக ஆட்சேர்ப்பு பணியில் அல்கொய்தா ஈடுபடுவதாக புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கதேச தீவிரவாதிகளின் புதிய வியூகம் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

- வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பினர் மேற்கு வங்கத்தை நிரந்தர தலைமையகமாக்க திட்டமிட்டுள்ளனர்.
- தீவிரவாதி முப்சாலின் தொலைபேசி பேச்சுகளின் அடிப்படையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- அதாவது மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவி இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியர் என்ற அடையாளத்துடனேயே இந்தியாவில் தாக்குதல் நடத்துவது என்பதுதான் ஜமாத் உல் முஜாஹிதீனின் யுக்தி.
- இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்தையும் இந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய இடங்களில்தான் முகாம்களை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர்.
- மேற்கு வங்கத்தின் பல இடங்களிலும் தங்களது தீவிரவாத முகாம்களை விரிவுபடுத்தியும் இருக்கின்றனர்.
- மேற்கு வங்கத்தில் செட்டிலாகி குடும்ப உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கும் என்பது ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பின் வியூகம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications