ஜம்மு காஷ்மீர்:2-வது கட்டமாக 26 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு- ஒமர் உட்பட 239 பேர் போட்டி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக மொத்தம் 26 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 26 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட மொத்தம் 239 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் கடந்த 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-வது கட்டமாக நாளை 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2-வது கட்ட தேர்தலில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 26 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, அப்னி கட்சித் தலைவர் அல்தாப் புகாரி, முன்னாள் அமைச்சர்கள் அலி சாகர், ரஹீம் ராதெர் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள்.
26 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. ஶ்ரீநகர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அதிகபட்சமாக 93 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புட்காம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 46 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ரஜோரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 34 பேர் போட்டியிடுகின்றனர். பூஞ்ச் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 25 பேர் களத்தில் உள்ளனர். கந்தெர்பால் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் 21 பேரும் ரேசி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 20 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தல் வாக்குப் பதிவுக்காக மொத்தம் 3,502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 25.78 லட்சம் பேர் வாக்காளர்கள்.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 61.38% வாக்குகள் பதிவாகி இருந்தன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல்; சாசனத்தின் 370-வது பிரிவு ரத்துக்குப் பின்பு நடைபெறும் தேர்தல் என்பதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.
-
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications