ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸுக்கு வேட்டு ரெடி- 4 சுயேட்சைகள் ஆதரவு தருவதால் என்சி-க்கு பெரும்பான்மை!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 7 சுயேட்சைகளில் 4 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சியே பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி அச்சத்தில் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 42 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6, சிபிஎம் 1 இடத்தில் வென்றது. ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். ஆனால் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியோ 49 இடங்களைப் பெற்றது. இதனால் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ்- சிபிஎம் கூட்டணி ஆட்சி அமைகிறது.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணக்கமாகவே செயல்படப் போகிறோம் என முதல்வராகப் பொறுப்பேற்கும் ஒமர் அப்துல்லா கூறி வருகிறார். பாஜகவை பகைத்துக் கொள்ளமாட்டோம் என்பதாகவே பேசுகிறது தேசிய மாநாட்டுக் கட்சி. குறிப்பாக 370-வது பிரிவு விவகாரத்தில் மத்திய அரசு எதுவும் செய்யாது; ஆகையால் மக்களை முட்டாளாக்காமல் அடுத்த வேலையைப் பார்ப்போம்; ஆனாலும் 370-வது பிரிவு தேவை என்பது கொள்கை எனவும் குழப்பமாகவே பேசி வருகிறது தேசிய மாநாட்டுக் கட்சி.
இதனால் தேசிய மாநாட்டுக் கட்சி பாஜகவுடன் கை கோர்க்குமோ என அச்சத்தில் இருக்கும் காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மொத்தம் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். இவர்களில் 4 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கே ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
4 சுயேட்சைகள் ஆதரவால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேசிய மாநாட்டுக் கட்சி 46 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் தயவு இல்லாமலேயே பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டது தேசிய மாநாட்டுக் கட்சி. ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் காங்கிரஸை ரொம்பவே கதிகலங்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications