For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நண்பர் வீட்டில் நடந்தது என்ன? காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி பலிக்கு காரணம் என்ன? விசாரிக்கும் போலீஸ்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

நண்பரின் வீட்டிற்கு சென்ற டிஜிபி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதே போல குற்றவாளியை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் ஜம்முவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா - டிஜிபி படுகொலையால் டென்ஷன்.. உச்சகட்ட முன்னெச்சரிக்கை! ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா - டிஜிபி படுகொலையால் டென்ஷன்.. உச்சகட்ட முன்னெச்சரிக்கை!

கொலை

கொலை

ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள தனது நண்பரின் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியாவின் உடல் இன்று மீட்கப்பட்டது. கழுத்து அறுக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் ஹேமந்த்தின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஹேமந்த்தின் வீட்டில் பணியாற்றி வந்த இளைஞர் யாசிர் என்பர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

ஏனெனில் கொலை நடந்ததிலிருந்து யாசிர் தலைமறைவாகியுள்ளார். எனவே அவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க இந்த சம்பவத்திற்கு லக்ஷர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் கிளை அமைப்பான 'மக்கள் பாசிச எதிர்ப்பு படை'தான் இந்த கொலையை நிகழ்த்தியுள்ளதாக கூறியுள்ளது. "ஜம்முவில் இன்று நடைபெற்றுள்ள இந்த கொலை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் ஜம்முவில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்களுக்கும் நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்.

 இணைய சேவை துண்டிப்பு

இணைய சேவை துண்டிப்பு

இனி வரும் காலங்களிலும் இந்த தாக்குதல்கள் அதிகரிக்கும். மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஜம்மு வந்துள்ள அமைச்சர் அமித்ஷாவுக்கு எங்களின் சிறிய பரிசுதான் இந்த டிஜிபி கொலை. இனி எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கும்" என்றும் இந்த அமைப்பு எச்சரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணைய வசதிகளும் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.

அறிவிப்பு

அறிவிப்பு

நேற்று ஜம்மு வந்திருந்த அமித்ஷா இன்று பேரணியில் பங்கேற்க இருந்த நிலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. டிஜிபி ஹேமந்த் குமார் நண்பர் வீட்டிற்கு சென்றார்? அங்கு யாரெல்லாம் இருந்தார்கள்? இந்த கொலைக்கான உண்மை நோக்கம் என்ன? கொலையாளி என சந்தேகிக்கப்படும் யாசிருக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? அந்த வீட்டில் அப்படி என்னதான் நடந்தது? என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
In Jammu and Kashmir, a top police officer has been brutally murdered by slitting his neck, and now the internet has been cut off. The incident took place when Home Minister Amit Shah was on a tour here. Due to this security has been strengthened across Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X