காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்- 3 நாட்களில் 3 தாக்குதல்கள்- உச்சகட்ட பதற்றம்- பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் 3 பயஙரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற ஜூன் 9-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ரேசி என்ற பகுதியில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

jammu kashmir terror attack

பயங்கரவாதிகளின் தாக்குதலில் பக்தர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இத்தாக்குதலில் மொத்தம் 10 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் பயங்கரவாதிகள் மீண்டும் கதுவா மவட்டத்தில் சுகாய் என்ற கிராமத்தில் திடீர் தாக்குதல் நடத்தினர். இது சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு அருகே உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளின் மீது கண்மூடித்தமாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தற்காலிக முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் பாதுகாப்பு தரப்பில் மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் தோடா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்- இ - முகமது பயங்கரவாதிகள் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர். முந்தைய 2 தாக்குதல்கள் குறித்து இந்த இயக்கம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

3-வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற நாள் முதலே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களில் 3 பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+