ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... ராணுவ வீரர் வீரமரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள ரத்னிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இணைய சேவை நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதல் நடந்து வரும் இந்த தாக்குதலில், பல்ஜீத் சிங் என்ற பாதுகாப்பு படை வீரர் வீர மரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.
மேலும், தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர்.
Jammu and Kashmir: Army Jawan Baljeet Singh lost his life in an encounter with terrorists in Pulwama earlier today. pic.twitter.com/iGSBWCojpf
— ANI (@ANI) February 12, 2019
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் பூஞ்ச் மாவட்ட எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். துப்பாக்கி மற்றும் சிறிய குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினர் பதற்றமான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பதிலடி தாக்குதல் நடத்தவும் தயாராக உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications