அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காஷ்மீர், ராஜஸ்தானில் பீதியில் உறைந்த மக்கள்.. நள்ளிரவில் திக்திக்
ஜெய்ப்பூர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்தியா உள்பட பல நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக பல நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து காணப்படுகிறது. இதனால் பொருட்சேதம், உயிர்சேதம் என்பது ஏற்படவில்லை.

நேற்றைய தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 என பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்று நள்ளிரவில் 11.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அந்த பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். இருப்பினும் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இரவு நேரம் என்பதாலும், நிலநடுக்கம் சக்தி குறைந்து காணப்பட்டதாலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
அசைந்த கட்டடங்கள்.. திடீரென குலுங்கிய நியூயார்க் சிட்டி.. நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன அமெரிக்கா!
அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நள்ளிரவு 1.29 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரை விட சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது. அதாவது பாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபகாலமாக வடஇந்தியாவில் சில இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications