அசைந்த கட்டடங்கள்.. திடீரென குலுங்கிய நியூயார்க் சிட்டி.. நிலநடுக்கத்தால் அதிர்ந்துபோன அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
இந்தியா உள்பட பல மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று அமெரிக்காவின் முக்கிய நகராக உள்ள நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் கட்டடங்கள் குலுங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இதனால் பரபரப்பான சூழல் உருவானது.
இதற்கிடையே நியூயார்க் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் மையம் உறுதி செய்துள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.53 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 116.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள லெபனான் நியூஜெர்சி அருகே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பும், உயிர் தேசமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கூறுகையில், ‛‛அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நியூயார்க், நியூஜெர்சி, பிலாடடெல்பியா, பாலடிமோர் பகுதிகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கின.
மேலும் நிலநடுக்கம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில், ‛‛அமெரிக்கா நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால் தூதரகத்தை [email protected] மூலம் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications