ஜம்மு காஷ்மீர் பகீர்- பொறியாளர் ரஷீத் எம்பி கட்சியுடன் ஜமாத் இ இஸ்லாமி மாஜி தீவிரவாதிகள் கூட்டணி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாத் கட்சியுடன் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி (ஜேஇஐ) இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டணி அமைத்துள்ளது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் பிரதான அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் களமாடும் நிலையில் கணிசமான எண்ணிக்கையில் பிரிவினைவாதிகள், பிரிவினைவாத ஆதரவாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் களம் காண்கின்றன. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் பிரிவினையை ஆதரிக்கும் சக்திகளும் களம் காண்கின்றன. ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் அவாமி இதிஹாத் கட்சி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது.
அவாமி இதிஹாத் கட்சியின் தலைவர் பொறியாளர் ரஷீத், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். லோக்சபா தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவைத் தோற்கடித்தவர். இந்த தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பொறியாளர் ரஷீத் எம்பியை, பாஜகவின் பி டீம் என காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் முத்திரை குத்துகின்றன. ஆனால் ரஷீத் எம்பியோ, பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள காஷ்மீரிகளையும் இணைத்துதான் ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார்.
இந்த பின்னணியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த இயக்கம் தற்போது ரஷீத் எம்பியின் இதிஹாத் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications