ஜம்மு காஷ்மீர் இறுதி கட்ட தேர்தல்.. மதியம் 1 மணி நிலவரப்படி 40.08 சதவீத வாக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. 40 தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் 415 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக உதம்பூர் சட்டமன்ற தொகுதியில் 51.66 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பாரமுல்லா தொகுதியில் 36.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே 29 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

jammu and kashmir assembly election 2024 bjp congress

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டபிரிவு 370 வது பிரிவு கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த மாநிலம் காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அங்கு உகந்த சூழல் வந்ததும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தான், 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 18 ஆம் தேதி 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 25 ஆம் தேதி 26 தொகுதிகளில் 2 வது கட்ட தேர்தல் நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் 11.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக உதம்பூர் சட்டமன்ற தொகுதியில் 14.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக பாராமுல்லா சட்டமன்ற தொகுதியில் 8.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மதியம் 12 மணி வரை 31.60% வாக்குகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி 44.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக உதம்பூர் சட்டமன்ற தொகுதியில் 51.66 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பாரமுல்லா தொகுதியில் 36.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

40 தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் மொத்தம் 415 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 17 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 29 வாக்கு மையங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் மாலை பிரசாரம் முடிந்தது. இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். அதேபோல காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். .

தேசிய மாநாட்டு கட்சிக்காக முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரும், மக்கள் ஜனநாயக கட்சிக்காக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியும் வாக்கு சேகரித்தனர். இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும் 40 தொகுதிகள், ஜம்மு பிராந்தியத்தின் 4 மாவட்டங்களிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் 3 மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

415 வேட்பாளர்களில், முன்னாள் துணை முதல்வர்கள் தாரா சந்த் (காங்கிரஸ்), முசாபர் பெய்க் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+