ஜம்மு காஷ்மீர்: ராகுல் காந்திக்கு இன்று பதிலடி தரும் அமித்ஷா! பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பதிலடி தர உள்ளார். ஜம்மு காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் அமித்ஷா, பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வாரி வழங்கி இருக்கும் நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ல் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 244 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 2-வது கட்ட தேர்தலில் 310 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தி தமது பிரசாரத்தில், ஜம்மு காஷ்மீரின் சொத்துகளை பிற மாநிலத்தவர் சூறையாட அனுமதித்தது பாஜக. ஜம்மு காஷ்மீரின் உரிமைகளை பறித்தது பாஜக. ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்து யூனியன் பிரதேசங்களாக கூறு போட்டதும் பாஜகதான். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பாஜக எதிராகவே செயல்பட்டு வருகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார்.
அத்துடன் மன்னராட்சி என்பது 1947-ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தம்மை இன்னமும் ஒரு மன்னர் போல நினைத்துக் கொண்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி ஆட்சியில் ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்க நெருக்கடி தருவோம் என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனங்களுக்கு இன்று ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி தருவார் என்பது எதிர்பார்ப்பு. இம்மாநிலத்தில் இன்றும் நாளையும் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் அமித்ஷா இன்று வெளியிட இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. இலவச மின்சாரம் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அந்த தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்தன. இதே பாணியில் பாஜகவும் இலவசங்கள் தருவோம் என வாக்குறுதிகளை வாரி வழங்கும் என்பதும் எதிர்பார்ப்பு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications