ஜம்மு காஷ்மீர்: மேலும் 29 வேட்பாளர்களை அறிவித்தது! இன்னும் எத்தனை போராட்டம் வெடிக்க போகுதோ?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று அறிவித்தது. இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 2-வது மற்றும் 3-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாஜகவின் முந்தைய வேட்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டனர். இதனால் ஶ்ரீநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருந்த நிலையில் தற்போதைய பட்டியல் வெளியாகி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீரில் பாஜக தனித்தே களம் காண்கிறது. காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- சிபிஎம்- பேந்தர்ஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியும் தனித்து களம் காண்கிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்காக 44 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அறிவித்தது. ஆனால் திடீரென இந்த வேட்பாளர் பட்டியல் திரும்பப் பெற்றது. பின்னர் 2 கட்டங்களாக 16 வேட்பாளர்களை பாஜக மேலிடம் அறிவித்தது.
பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவுக்கு தாவியவர்கள், பாஜகவில் புதியதாக இணைந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் பாஜகவில் குழப்பம் ஏற்பட்டது.
அத்துடன் ஶ்ரீநகரில் உள்ள ஜம்மு காஷ்மீர் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோம் அல்லது கட்சியை விட்டே கூண்டோடு ஓடிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பாஜக 3-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் 29 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். 2-வது, 3-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தற்போது பாஜக அறிவித்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications