ஜம்மு காஷ்மீர் தேர்தல்: "இந்தியா" கூட்டணியை உயிர்ப்பிக்க காங்கிரஸ் மும்முரம்! மெகபூபா மகள் போட்டி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியை உயிர்ப்பிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேர்தல்களில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிலையில் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு நடைபெறும் முதல் தேர்தல் இது.
ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை பிரதான அரசியல் கட்சிகள். இவை தவிர சிறிய கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன. தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றிருப்பவை. இதனால் ஜம்மு காஷ்மீர் தேர்தலிலும் இந்தியா கூட்டணியாக நின்று இந்த 3 கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்த போது முரண்பட்ட பதில்களே வந்தன.
தற்போது, தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தாரீக் ஹமீது கூறுகையில், தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருப்பவைதான். இதனால் 3 கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கிறோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது என்றார்.
இதனிடையே தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான நடவடிக்கை, மாநில அந்தஸ்து திரும்பப் பெறுதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தமது வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது.விரைவில் தமது வேட்பாளர்களை மெகபூபா முப்தி அறிவிக்க உள்ளார். மெகபூபாவின் மகள் இல்திஜா முப்தி தற்போதைய தேர்தலில் களம் காண உள்ளார். இல்திஜா முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications