ஜம்மு காஷ்மீரின் 'அமேதி'.. தாத்தா, அப்பா வென்ற கோட்டையில் வெற்றி கொடி பறக்க விடுவாரா உமர் அப்துல்லா?
ஶ்ரீநகர்: உத்தரப்பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் எப்படி இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருக்கின்றனவோ அதேபோல ஜம்மு காஷ்மீரில் 'அப்துல்லா' குடும்பத்தின் கோட்டையாக இருப்பது கந்தெர்பால் தொகுதி. இத்தொகுதியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா போட்டியிடுவதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபேறுகிறது. 3 கட்ட தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அப்துல்லா குடும்பத்து கோட்டை: ஜம்மு காஷ்மீரில் விஐபி தொகுதிகளில் முக்கியமானது கந்தெர்பால். ஜம்மு காஷ்மீரில் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1962-ம் ஆண்டில் தேசிய மாநாட்டுக் கட்சிதான் இங்கு வென்றது. 1967, 1972-ல் காங்கிரஸ் தொடர்ந்து வென்றது. ஆனால் 1977, 1983, 1987, 1996 ஆகிய தேர்தல்களில் உமர் அப்துல்லாவின் தாத்தா காஷ்மீர் சிங்கம் என அழைக்கப்பட்ட ஷேக் முகமது அப்துல்லா, உமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா வெற்றி பெற்று 'அப்துல்லா' கோட்டையாக வைத்திருந்தனர். 2002-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி இத்தொகுதியில் வென்றது. 2008-ம் ஆண்டு உமர் அப்துல்லா முதல் முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போதுதான் ஜம்மு காஷ்மீர் முதல்வரானார் உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா).
காஷ்மீரின் அமேதி: 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் தேசிய மாநாட்டுக் கட்சிதான் இங்கு வென்றது. இதனால்தான் இந்த தொகுதியை ஜம்மு காஷ்மீரின் "அமேதி" என அழைக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் எப்படி இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறதோ அதேபோல அப்துல்லா குடும்பத்தின் கோட்டையாகவே கந்தெர்பால் தொகுதி இருக்கிறது.
கந்தெர்பால் தொகுதி வாக்காளர்கள்: கந்தெர்பால் தொகுதியில் மொத்தம் 1.29 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 64,109; பெண் வாக்காளர்கள் 64,904. கடந்த காலங்களைப் போல அப்துல்லா குடும்பம் கர்ந்தெர்பால் தொகுதியில் அவ்வளவு எளிதாக வெல்ல முடியுமா? என்பது சந்தேகம்தான் என்கின்றனர் காஷ்மீர் பத்திரிகையாளர்கள்.
உமர் அப்துல்லாவுக்கு கடும் போட்டி: உமர் அப்துல்லாவை எதிர்த்து மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பஷீர் மிர் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் கங்கன் தொகுதியில் போட்டியிட்ட பஷீர் மிர், தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் மியான் அல்தாப்புக்கு கடும் போட்டியை உருவாக்கியவர். அத்துடன் 2014-ம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளராக இந்த தொகுதியில் வென்ற இஷ்பாக் ஜப்பார் இம்முறையை கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேசிய மாநாட்டுக் கட்சியின் வாக்குகளை ஜப்பார் சிதறடிக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது. மேலும் காஷ்மீர் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஷேக் ஆசிக்கும் களம் காண்கிறார். ஜம்மு காஷ்மீரில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள பொறியாளர் ரஷீத் கட்சியின் வேட்பாளராக ஷேக் ஆசிக் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் உமர் அப்துல்லாவை சுயேட்சையாகப் போட்டியிட்டு தோற்கடித்தவர்தான் ரஷீத். இத்தனையையும் தாண்டி சிறையில் உள்ள பயங்கரவாதி பர்காதியும் இத்தொகுதியில்தான் போட்டியிடுகிறார். இத்தனை சவால்களையும் தாண்டி உமர் அப்துல்லா வெல்வாரா? தாத்தா காலத்து கோட்டையில் வெற்றிக் கொடியை பேரன் உமர் அப்துல்லா பறக்கவிடுவாரா? என்பது அக்டோபர் 8-ந் தேதி தெரிந்துவிடும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications