பாஜக குஷி: அமித்ஷாவைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 3 நாள் சூறாவளி பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்ய இருப்பதாக வெளியான தகவலால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் பிரசாரம் செய்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை அம்மாநில பாஜகவினர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வலிமையாக இருப்பதால் பாஜகவுக்கு பிரதமர் மோடியின் பிரசாரம் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செப்டம்பர் 18-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் நாடு விடுதலை அடைந்தது முதல் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக ரத்து செய்தது. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவுதான் இந்த சிறப்பு அந்தஸ்தை ஜம்மு காஷ்மீருக்கு வழங்கியது. 2019-ம் ஆண்டு இந்த சிறப்பு அந்தஸ்தை பறித்த மத்திய பாஜக அரசு, ஜம்மு காஷ்மீரையும் 2 கூறுகளாக பிரித்து யூனியன் பிரதேசமாக்கியது.
இதனால் தற்போதைய சட்டசபை தேர்தலானது மத்திய பாஜக அரசின் 370-வது ரத்து, மாநில அந்தஸ்து பறிப்பு, யூனியன் பிரதேசமாக பிரித்தது ஆகிய நடவடிக்கைகளுக்கான மக்களின் தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.
இந்தப் பின்னணியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்காக ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். இதன் பின்னர் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார்.
தற்போது பிரதமர் மோடியும் ஜம்மு காஷ்மீரில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 14 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது. பிரதமர் மோடியின் 3-வது தேர்தல் பிரசார கூட்ட தேதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தை ஜம்மு காஷ்மீர் பாஜகவினர் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications