ஜம்மு காஷ்மீரை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி.. 2வது பெரிய கட்சியான பாஜக! மெகபூபா கட்சிக்கு மரணஅடி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவடைந்துள்ளது. ரிசல்ட் முழுமையாக வெளியான நிலையில் தேசிய மாநாட்டு கட்சி + காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜக 2வது பெரிய கட்சியாக உருமாறி எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மெகபூபா முப்தியின் பிடிபி மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. மெகபூபா முப்தி முதல்வரான நிலையில் பாதியில் ஆட்சி கவிழ்ந்தது. 2018 ல் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது அதன்பிறகு ஜனாதிபதி ஆட்சி அமலானது.

haryana assembly election results 2024 jammu kashmir assembly election results 2024 2024 2024

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யப்பட்டது. மத்திய பாஜக அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதோடு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரித்தது. அதற்கு ஜம்மு காஷ்மீர், லடாக் என பெயரிடப்பட்டது. இதில் லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை. ஜம்மு காஷ்மீரில் மட்டுமே சட்டசபை தொகுதிகள் உள்ளன.

ஜம்மு காஷ்மீரை எடுத்து கொண்டால் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் முதல் தேர்தலை எதிர்கொண்டது. 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 65.52 சதவீத ஓட்டு பதிவான நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிகளும் உள்ளன. அதேபோல் பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கியது..

தேர்தலில் பாஜக 62 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் ஜம்முவில் 43 வேட்பாளர்களும், காஷ்மீரில் 19 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். அதேபோல் கூட்டணி என்ற அடிப்படையில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டு கட்சி 52 கட்சிகளிலும் போட்டியிட்டது. அதேபோல் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்கள் தனித்தனியாக போட்டியிட்டனர்.. அதேபோல் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து களமிறங்கினர்..

3 கட்டங்களாக நடந்த தேர்தல் அமைதியாக முடிந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை என்பது தொடங்கியது. முதலில் தபால் ,ஓட்டுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக தொடங்கியது. . தபால் ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து வாக்குப்பெட்டியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி நடந்து முடிந்துள்ளது. இதில் தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது. குறிப்பாக அந்த கூட்டணியில் உள்ள ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி வேகமாக முன்னேறியது. பாஜகவும் விரட்டி சென்ற நிலையில் மெகபூபா முப்தியின் கட்சியால் தொடக்கம் முதலே எழவே முடியவில்லை.

தொடக்கம் முதலே காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி முன்னிலை வகித்த நிலையில் கடைசி வரை அந்த டிரெண்ட் மாறவே இல்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கான ரிசல்ட் முழுவதும் வெளியானது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ‛இந்தியா' கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.‛இந்தியா' கூட்டணியில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.

அதேவேளையில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக மாறி உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட உள்ளது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவரான ரவீந்தர் ரெய்னா, நவுசேரா தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இவரது பெயரை மையமாக வைத்து தான் டெல்லியில் நரேந்திரா.. ஜம்மு காஷ்மீரில் ரவீந்திரா என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் வெற்றி பெறவில்லை. இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பளரான சுரீந்தர் குமார் சவுத்ரி 35,069 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். ரவீந்தர் ரெய்னா மொத்தம் 27,250 ஓட்டுகள் மட்டுமே வாங்கி 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும். மேலுமு் இந்த தேர்தலில் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் பிடிபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இல்திஜா முப்தியை காங்கிரஸ் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் பஷீர் அகமது ஷா வீழ்த்தினார். இவர் மொத்தம் 33,299 ஓட்டுகள் பெற்ற நிலையில் இல்திஜா முப்தி 23,529 வாக்குகள் மட்டுமே பெற்று 9,770 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை தான் அமையும் என்று பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் அமைந்து இருந்தன. ஆனால் தொடக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வந்த நிலையில் கருத்து கணிப்பு முடிவுகள் பொய்யாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+