ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே 5 எம்எல்ஏக்கள்.. பாஜகவுக்காக ஆளுநர் ஸ்கெட்ச்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனிடையே வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே, அங்கு பாஜக ஆதரவாளர்கள் 5 பேரை கவர்னர் எம்எல்ஏக்களாக நியமித்துள்ளார். இது ஜம்மு காஷ்மீரில் அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது. பாஜக ஜம்மு மாகாணத்தில் அதிக இடங்களை பிடித்தாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவர்கள் படுதோல்வியை சந்திப்பார்கள் என்றே எக்சிட் போல் முடிவுகளில் கூறப்பட்டது.
இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நயா காஷ்மீர் (அமைதியான, வளமான) என்ற முழக்கத்துடன் பாஜக ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பணியாற்றியது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 பாஜக ஆதரவாளர்கள் கவர்னர் நியமனம் மூலம் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக இதுவரை தனிப்பெரும்பான்மையுடன் ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்தது இல்லை. 2014 தேர்தலுக்கு பிறகு, பாஜக மக்கள் ஜனநாய கட்சியுடன் இணைந்து ஆ ட்சியமைத்தது. 2018 ஆம் ஆண்டில் கூட்டணி பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் மனோஜ் சின்ஹா செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது துணை நிலை ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டப்படி, 2 பெண்கள், 2 காஷ்மீர் பண்டித்கள், 1 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதி ஆகியோருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஐந்து நியமன எம்எல்ஏக்களை அறிவிப்பதற்கான அதிகாரம் ஆளுநரிடம் தான் உள்ளது.
ஜம்மு மாகாணத்தில் பாஜக அதிக சீட்களை பெறும் நிலையில், இந்த ஐந்து நியமன எம்எல்ஏக்கள் அவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாக மாறிவிடும் என மற்ற கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு அதே அதிகாரம், இந்த எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும். மக்களின் தீர்ப்பை மீறி, இதுபோல எடுக்கப்படும் முடிவுகள் ஜனநாயகத்தை புதைக்குழியில் தள்ளும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியோ, இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று கூறியுள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications