2 நாள் முன் அங்கேதான் இருந்தேன்.. ஜம்மு காஷ்மீர் அட்டாக்.. இர்பான் பதான் சொன்ன ஷாக் தகவல்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.. தினம் தினம் பல நூறு சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுற்றுலா தளத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.

Jammu Kashmir

கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றொருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக இராணுவ ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏனெனில் அந்தப் பகுதியை கால்நடையாகவோ அல்லது குதிரையின் மூலமாகவோ மட்டுமே அணுக முடியும். இதனால் அங்கே மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சிக்கல்.

இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகர் சென்றடைந்தார், அங்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் நளின் பிரபாத் அவரிடம் இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி - தனது இரண்டு நாள் சவூதி அரேபியா பயணத்தை ரத்து செய்துவிட்டு நேற்று இரவு இந்தியாவுக்கு புறப்பட்டார்.

இர்பான் பதான் கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு அப்பாவி உயிர் இழக்கப்படும்போது, ​​மனிதநேயம் இழக்கிறது. இன்று காஷ்மீரில் நடந்ததைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் மனவேதனையாக இருக்கிறது. நான் இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு இருந்தேன் .. இந்த வலியை மிகவும் எனக்கு மிகவும் நெருக்கமான வலியாக உணர்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் கொடூரம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் இன்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.

முக்கியமாக சில தாக்குதல்களில் சரியாக குழந்தைகளோடு இருக்கும் கணவன் - மனைவிகளில், கணவனை மட்டும் குறி பார்த்து சுட்டு உள்ளனர். அதிலும் பெண் ஒருவரை சுடாமல்.. நான் ஏற்கனவே பல பெண்களை சுட்டுவிட்டேன். உன்னை விடுகிறேன். நீ போய் மோடியிடம் இதை சொல் என்று திமிராக பேசி உள்ளனர். சுடப்பட்ட ஆண்கள் எல்லாம் இந்துக்கள் தானா என்பதை உறுதி செய்த பின்பே தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளனர்.

பஹல்காம் தாக்குதலில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் மூன்று வெளிநாட்டினர் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்த இடத்தில் இருந்து M4 மற்றும் AK-47 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+