சட்டசபை தேர்தல்: ஜம்மு காஷ்மீரையும் விட்டு வைக்காத ' இலவச மின்சாரம்' தேர்தல் வாக்குறுதி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டிக் கொண்டு 'இலவச மின்சாரம்' வழங்குவோம் என வாக்குறுதிகள் வழங்கி வருகின்றன. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டுள்ளது. காஷ்மீரின் மற்றொரு அரசியல் கட்சியான அப்னி கட்சி தாங்கள் ஆட்சியில் இடம் பெற்றால் 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அக்டோபர் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் நடைபெறுகிற முதல் சட்டசபை தேர்தல். 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 10 ஆண்டுகள் கழித்து இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் மத்திய பாஜக அரசு நீக்கிய சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம்; ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் முழுமையான மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுப்போம் என்பதை பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சியும் அப்னி கட்சியும் இதனை வலியுறுத்தி உள்ளன. மேலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் வழங்குவதற்கான வாக்குறுதிகளும் இடம் பெற்றுள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், 200 யூனிட் இலவச மின்சாரம், அரசியல் கைதிகள் விடுதலை, காஷ்மீர் பண்டிட்டுகள் மீள் குடியேற்றம், பாஸ்போர்ட் வெரிபிகேஷன் என்ற பெயரிலான சித்ரவதையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
அத்துடன் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு ஆண்டுக்கு 12 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்குவோம் என்பதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் வாக்குறுதி.
இதேபோல அப்னி கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் அரசியல் கைதிகள் விடுதலை, 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்கிற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பண்டிட்டுகள் மீள் குடியேற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்டவைகளை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications