Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இரங்கல்- கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

Subscribe to Oneindia Tamil

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை சுட்டுப் படுகொலை செய்த பாகிஸ்தானின் பயங்கரவாத செயலுக்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீர் சட்டசபையின் இன்றைய சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு சட்டசபையைக் கூட்டுவதற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்குப் பரிந்துரைத்தது.

jammu kashmir assembly

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டுவதற்கான அழைப்பு விடுத்தார் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா. இன்றைய சிறப்பு சட்டசபை கூட்டத்தில், பஹல்காமில் படுகொலை செய்யப்பட்ட 26 அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பஹல்காம் படுகொலைகள் தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பஹல்காம் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மக்கள், பஹல்காம் படுகொலைச் சம்பவத்தால் மிகவும் ஆவேசப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் மெல்ல திரும்பிய இயல்புநிலையை ஒரேயடியாக குழிதோண்டி புதைத்துப் போட்டுவிட்டது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல். இந்த படுபாதக பயங்கரவாதத்தை ஜம்மு காஷ்மீர் மக்கள் நிராகரிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டசபை கூட்டத்திலும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் தங்களது ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் பாகிஸ்தான் மீதான பெருங்கோபத்தையும் கொட்டித் தீர்த்தனர்.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் எப்படியான கருத்துகளை முன்வைக்க வேண்டும்; மத்திய அரசு நோக்கிய கேள்விகளுக்கு எந்த பதில்களைத் தர வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+