ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. பெண் போலீஸ் அதிகாரி பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், சிறப்பு போலீஸ் அதிகாரியாக (SPO) பெண் தீவிரவாதிகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் குஷ்பூ ஜன். தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோபியான் மாவட்டத்தின், வெகில் என்ற கிராமத்தில் குஷ்பூ ஜன் வீடு அமைந்துள்ளது.

இன்று பிற்பகல் 2.40 மணிளவில், குஷ்பு ஜன் தனது வீட்டுக்கு வெளியே வந்தபோது, திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்பிறகு தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த குஷ்பூ ஜன், உடனடியாக பாதுகாப்பு படையினரால் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், குஷ்பு ஜன் உயிரிழந்ததுவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு தகவல் தெரிந்ததும், அந்த பகுதி முழுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் துவங்கியுள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு மாதாந்திர ஊதியம் அடிப்படையில், மாநில காவல்துறையால், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு, துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்கு பயிற்சி அளிப்பது கிடையாது, அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதில்லை. எனவேதான் தீவிரவாதிகள் குறி வைத்து சிறப்பு போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
-
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications