பிரதமர் மோடி ஜாதி.. அடிமடியிலேயே கை வைத்த நிதிஷ் கட்சி! தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் சாதி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வருமா என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்து வருபவர் நீரஜ் குமார். இவர் அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2019 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த நீரஜ் குமார், "பிரதமர் நரேந்திர மோடியின் "மோத் கஞ்சி" சமூகம் கடந்த 2002 ஆம் ஆண்டில்தான் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்கப்பட்டது. அப்போதுதான் அவர் குஜராத் மாநில முதலமைச்சராகவும் பதவியேற்றார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறைக்க முயன்ற பிரதமர் மோடி, 1994 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோதே "மோத் கஞ்சி" சமூகம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக கூறி வருகிறார்." என்றார்.
இந்திய அரசின் கெசட்டை தூக்கி காட்டிய நீரஜ் குமார் எந்தெந்த சமூகங்கள் எந்த ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். "மோத் கஞ்சி சமூகத்திற்கு 6 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் ஒன்று கஞ்சி முஸ்லிம் பிரிவு. அந்த பிரிவை மட்டும்தான் 1994 ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்தார்கள். மற்ற பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மோத் கஞ்சிகளை தேர்தல் லாப நோக்கோடு சேர்த்து உள்ளார்கள்.

1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மோத் கஞ்சி சமுதாயத்தினர் கல்வியறிவில் பிராமணர்களுக்கு நிகராகவும், ரஜபுத்திர சமுதாயத்தினரை விட அதிகமாகவும் இருந்து உள்ளனர். எனவே ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் மோத் கஞ்சி வகுப்பினர், தங்களை பனியாக்களாக கருத வேண்டும் என்றும், கஞ்சிக்களாக கருதக்கூடாது எனவும் ஆங்கிலேயர்களிடம் மனு அளித்து உள்ளார்கள்.
அவர்கள் யாருடன் திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவதற்கு காரணம், குஜராத்தில் நடைபெற்ற மோசடி வெளியில் தெரிந்துவிடும் என்பதாக்தான்." என்றார். பீகார் அரசு அண்மையில் வெளியிட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது. இதை பார்த்து பிற மாநில அரசுகளும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என அறிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications