ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பான் மாணவி பலாத்காரம்: மாயமான கைடு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மாணவியை கைடு ஒருவர் போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூருக்கு வந்த ஜப்பான் மாணவி அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் வழிகாட்டி என்று கூறி அப்பெண்ணை சந்தித்துள்ளார்.

பின்னர் ஜெய்ப்பூரில் இருந்து 60 கி..மீ. தொலைவில் உள்ள டுடு என்ற இடத்தில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த நபருடன் இருசக்கர வாகனத்தில் அப்பெண் சென்றுள்ளார்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் போதை மருந்து கொடுத்து, தன்னை அந்த நபர் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தன்னை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் ஜப்பானிய பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டுடு போலீசார், மாயமான நபரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடித்தி வருகின்றனர்.
நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ராஜாஸ்தானில் ஆளும் பாஜக அரசு பெண்களையும், சுற்றுலா பயணிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கயாவில் பலாத்காரம்
கடந்த ஜனவரி மாதம் கயாவிற்கு சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை சுற்றுலா வழிகாட்டிகள் இருவர் கடத்திச் சென்று அடைத்து வைத்து பலாத்காரம் செய்தனர். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்கும் முன்னர் மற்றொரு ஜப்பான் மாணவி வழிகாட்டி ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications