தாமரையைத் தொட்டது தப்பாப் போச்சு.. பாஜகவை விட்டு விலகினார் ஜஸ்வந்த் மகன்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜகவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் கட்சியை விட்டு விலகியுள்ளார்.
பாஜகவில் நான் சேர்ந்ததே ஒரு பெரிய தப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார். ராஜஸ்தானின் பார்மர் நகரில் இன்று ஸ்வாபிமான் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிறகு தனது விலகல் முடிவை அறிவித்தார் மன்வேந்திர சிங். தாமரையைத் தேர்வு செய்தது தப்பாக போய் விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பார்மர் இவரது தொகுதியாகும். இந்தத் தொகுதியில் தற்போது ஸ்வாபிமான் பேரணியை அவர் நடத்தி வருகிறார். சுயமரியாதையைக் காப்போம் என்ற பெயரில் இந்த பேரணியை அவர் நடத்தி வருகிறார். வாக்காளர்களை சந்தித்து வருகிறார். இத்தொகுதியிலிருந்து முன்பு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்வேந்திர சிங்.
ராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ள நிலையில் மன்வேந்திர சிங் கட்சியை விட்டு விலகியிருப்பது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக டிக்கெட் தர மறுத்தது. அது முதலே மன்வேந்திர சிங் கட்சி மீது அதிருப்தியுடன் இருந்து வந்தார்.
மன்வேந்திர சிங்கின் விலகல் குறித்து அவரது மனைவி சித்ரா சிங் கூறுகையில், மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். விவசாயிகள் ஆத்திரத்துடன் உள்ளனர். எனது குடும்ப மரியாதை மட்டுமல்ல இது. மாறாக மொத்த மக்களின் மரியாதையும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது என்றார் சித்ரா சிங்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications