ஜெயலலிதா யாரையும் சந்திப்பது இல்லை, சசிகலா, இளவரசி தினமும் 5 பேரை சந்திக்கின்றனர்: கர்நாடக டி.ஐ.ஜி.
பெங்களூர்: சிறைக்கு வந்ததில் இருந்து ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்திக்கவில்லை என்றும் சசிகலா, இளவரசி தான் தினமும் 4 முதல் 5 பேரை சந்தித்து பேசுவதாகவும் கர்நாடக டி.ஐ.ஜி. ஜெயசிம்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்திற்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஜெயலலிதாவின் உடல் நிலையை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் நலமாக உள்ளார். சிறை சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் அவர்.

அவர் சிறைக்கு வந்ததில் இருந்து இதுவரை யாரையுமே சந்திக்கவில்லை. ஆனால் சசிகலா, இளவரசி ஆகியோர் தினமும் 4 முதல் 5 பேரை சந்தித்து பேசுகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் வெளியில் இருந்து உணவு வாங்கி சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவர் சிறையில் கொடுக்கப்படும் பால், ரொட்டி ஆகியவற்றை சாப்பிடுகிறார். மேலும் இட்லி, பொங்கல் உள்ளிட்டவற்றை 2, 3 நாட்களுக்கு ஒரு முறை வரவழைத்தும் சாப்பிடுகிறார்.
அவர் தனக்கு சிறப்பு வசதியோ, சலுகைகளோ வேண்டும் என்று கேட்கவில்லை. பெண் அதிகாரி திவ்யஸ்ரீ ஜெயலலிதாவை கவனித்து வருகிறார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications