ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை
பெங்களூர்: பெங்களூர் சிறப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் தனக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களைஉயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால சிறப்பு நீதிபதி ரத்னகலா விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்.
மொத்தம் நான்கு மனுக்களை ஜெயலலிதா தரப்பு வக்கீல் தாக்கல் செய்துள்ளார். அதில் ஒன்று பெங்களூர் தனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு மனு ஆகும். இது போக, விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவை மற்ற 3 மனுக்கள் ஆகும்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை நேரில் சந்தித்து மனு செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அலுவலகத்தில் வைத்து மனுக்களை அதிமுக வக்கீல்கள் அளித்துள்ளனர்.
தற்போது தசரா விடுமுறையில் உள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அக்டோபர் 6ம் தேதி வரை கோர்ட் விடுமுறையாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பெஞ்ச் அமர்வு நடைபெறும். எனவே ஜெயலலிதாவின் மனு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. நீதிபதி ரத்னகலா இந்த மனுக்களை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்துள்ள முன்னாள் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்ட நிபுணருமான ராம்ஜெத்மலானி ஜெயலலிதாவுக்காக ஜாமீன் கோரும் வழக்கில் ஆஜராகவுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. இதேபோல் அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பைத் தொடர்ந்து தனிக்கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழங்கிய தீர்ப்பின் நகல் ஜெயலலிதாவின் வக்கீல்களுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அடுத்து கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதலில் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications