ஜாமீன் மறுத்தது மட்டுமல்ல, ஜாமீன் கொடுத்த நீதிபதியும் கர்நாடகாவை சேர்ந்தவர்தான்
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே தொடர்ந்து ஏதோ ஒரு பிணைப்பு இருந்து கொண்டே உள்ளது.
ஜெயலலிதா கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் பிறந்தவர். பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியில் படித்தவர். அவர் தமிழகத்து முதல்வரானார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 27ம்தேதி வழங்கியது கர்நாடகாவை சேர்ந்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஆவார்.

இதன்பிறகு ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகராவும் கர்நாடகாவை சேர்ந்தவரே.
இதனால் கர்நாடக நீதிபதிகள் சதி செய்துவிட்டதாக அதிமுகவில் சிலர் புகார் கூறினர். போஸ்டர்கள் அடித்து ஒட்டி வந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை சென்றது.
அங்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவே பதவி வகிப்பவர் கர்நாடகத்தை சேர்ந்த தத்து தான். மேலும், இந்த ஜாமீன் வழக்கை விசாரித்த பெஞ்சிலும் அவர் இருந்தார்.
தத்து தலைமையிலான அமர்வுதான் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜெயலலிதாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான தொடர்பும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications