ஜெ. விடுதலைக்கு எதிரான வழக்கு: சட்டசபை தேர்தலுக்கு முன் வருமா தீர்ப்பு? பரபரக்கும் அரசியல் களம்
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளால் மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு. சட்டசபை தேர்தல் நடைபெறும் மே 16-ந் தேதிக்கு முன்னர் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வருகிறது. கர்நாடகா அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தங்களது இறுதிவாதங்களை முன்வைத்துவிட்டனர். இவ்வழக்கின் முதல் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமியும் வாதத்தை நிறைவு செய்துவிட்டார்.

மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த திமுக பொதுச்செயலர் அன்பழகன் தமது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருக்கிறார். தற்போது ஜெயலலிதா தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரும் 5-ந் தேதி மீண்டும் தொடங்கும் விசாரணையில் ஜெயலலிதா வழக்கறிஞர் வாதத்தைத் தொடர உள்ளார். அவர் குறைந்தபட்சம் ஒரு வார காலம் தமது வாதத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது. அப்போது நீதிபதிகள் கேள்வி ஏதேனும் எழுப்பினால் அதற்கு பதிலளிக்க வேண்டும். ஆக ஏப்ரல் 5-ந் தேதி முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் இவ்வழக்கின் விசாரணை நடைபெறும்.
அதன் பிறகு கர்நாடகா அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடியுமா?என்பது குறித்த விசாரணையும் நடைபெற உள்ளது. இவ்வழக்கைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், திரும்ப திரும்ப முன்வைக்கப்படும் வாதங்களை நிராகரித்துவிடுகின்றனர். புதிய வாதங்கள் இருந்தால் அதை முன்வைக்குமாறு நீதிபதிகள் கோருகின்றனர். கர்நாடகா அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பு மூவருமே, கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) ஜெயலலிதாவை விடுதலை செய்தது தவறு என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும். தீர்ப்பு என்பது 10 நாளிலும் வழங்கப்படலாம் அல்லது 2 மாதங்கள் கழித்தும் கூட தரப்படலாம்.
இதில் மிக முக்கியமானது தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னர் அதாவது மே 15-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்துக்கு கோடைகால விடுமுறை தொடங்கிவிடுகிறது.
ஆகையால் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு தேர்தலுக்கு முன்னர் வருமா? தேர்தலுக்கு பின் வருமா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் நிலவுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications