காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போடும் ஜெயசுதா? தெலுங்கு தேசத்தில் இணைய முடிவு
ஹைதராபாத்: தெலுங்கு நடிகையும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜெயசுதா, காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் முழுக்குப்போட்டுவிட்டு தெலுங்குதேசம் கட்சியில் அவர் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் படஉலகில் முன்னாள் கதாநாயகனாக இருந்த நடிகர் ஜித்தேந்திராவின் உறவினரான நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் ஜெயசுதா.

சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், மேல்நாட்டு மருமகள், பட்டிக்காட்டு ராஜா, பட்டாக்கத்தி பைரவன், பாண்டியன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஜெயசுதா,57, ஐம்பதுக்கும் அதிகமான தெலுங்குப் படங்களிலும், கன்னடம், மலையாளம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் ராமாராவ் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர். தெலுங்குத் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கடந்த 2009ம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதி எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கடந்த 2014ம் ஆண்டு இதே தொகுதிக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜெயசுதா, சமீபகாலமாக காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி படிப்படியாக மறைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல நட்சத்திரங்கள் அதிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் முழுக்குப்போட்டுவிட்டு தெலுங்குதேசம் கட்சியில் அவர் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அக்கட்சியில் ஜெயசுதா சேரப்போவதாக அவரது நலவிரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications