மும்பை "டூ" துபாய் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..மஸ்கட்டில் அவசர தரையிறக்கம்
மஸ்கட்: மும்பையில் இருந்து புறப்பட்டு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் 54 பயணிகளும், 7 விமான பணியாளர்களும் இருந்தனர். இந்நிலையில், மும்பை கால்சென்டர் ஒன்றுக்கு வந்த தகவலில் 9W536 என்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, தகவல் அறிந்ததும் விமானத்தை ஓட்டிய விமானி, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவலை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து துபாய் நோக்கி சென்ற விமானம், மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து மஸ்கட் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து விமானம் மிகவும் பாதுகாப்பாக மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானம் தற்போது மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. விமானநிலைய அதிகாரிகள் ஆலோசித்த பின்னர், விமானத்தை மீண்டும் இயக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
விமானத்தில் வெடிகுண்டு என சந்தேகத்திற்கு இடமாக எந்தஒரு பொருளும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications